மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 11 Nov 2022 1:29 AM IST (Updated: 11 Nov 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

முன்னேற்றத்திற்காக முன் நிற்கும் மீன ராசி அன்பர்களே!

எடுத்த காரியங்களில் சாதிக்க கடின முயற்சி தேவைப்படும். அதே நேரம் காரியங்கள் பலவும் தடுமாற்றம் காணும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உற்சாகமாக ஈடுபட்டாலும், சில தவறுகள் ஏற்படலாம். சக ஊழியர்களின் பணியையும் சேர்த்து செய்யும் நிலை உருவாகலாம்.

சொந்தத் தொழில் செய்பவர்கள், பணியில் சுறுசுறுப்பாக இருந்தாலும் பலன் தள்ளிப் போகும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் போட்டிகள் தொல்லை தரலாம். குடும்பத்தில் ஏற்படும் சிறு பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள்.

குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சிக்காக போராடுவீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. கலைஞர்கள் பணிகளில் கலகலப்பாக ஈடுபடுவார்கள். புதிய வாய்ப்புகள் மகிழ்ச்சிப்படுத்தும். பங்குச்சந்தையில் பண வரவு இருந்தாலும், கைக்கு கிடைக்க தாமதமாகும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை நெய் தீபம் ஏற்றிவைத்து முருகப்பெருமானை வழிபட்டால் வாழ்க்கையில் வளம் கூடும்.


Next Story