மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 25 Nov 2022 1:25 AM IST (Updated: 25 Nov 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

நுண்கலைகளில் ஈடுபாடு காட்டும் மீன ராசி அன்பர்களே!

தொழில் மேன்மை உருவாகும் வாரம் இது. சிறிய அளவில் தொல்லைகள் இருந்தாலும், பொருளாதார தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. நெருங்கிய உறவினரால் சுப நிகழ்ச்சி ஒன்று கைகூடி வரும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் பணிகளில் கவனமாக இருப்பது அவசியம். சக ஊழியர்களுடன் எந்தவிதமான வாக்குவாதங்களிலும் ஈடுபடாதீர்கள். தொழில் செய்பவர்கள் தங்கள் துறை யில் அதிக லாபம் அடைவதற்காக கடுமையாக முயற்சிப்பார்கள்.

ஒரு சிலருக்கு காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். பிரிந்து சென்ற உறவினர்கள் திரும்பி வருவர். திருமணத்தடை உள்ளவர்களுக்கு உடனடியாக திருமணம் கைகூடி வர வாய்ப்பு உண்டு. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும்.

பாிகாரம்:- செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு வெண்ணிற மாலை அணிவித்து வழிபட்டால் வாழ்வு சிறக்கும்.

1 More update

Next Story