மீனம் - வார பலன்கள்
எதிர்ப்புகளை முறியடிப்பதில் கவனம் செலுத்தும் மீன ராசி அன்பர்களே!
உங்களுக்கு பணிகளின் மூலம் வரவு இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். நிலம் அல்லது வீடு விற்பனையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. வெளியூரிலிருந்து முக்கிய தகவல் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களில் சிலர் செய்த தவறினால், அலுவலகத்தில் சலசலப்பு உருவாகக்கூடும். உயரதிகாரிகளின் அனுசரிப்பால் பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள். சுயதொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூட்டுத்தொழில் நன்றாக இருந்தாலும், எதிர்பார்க்கும் லாபம் குறையலாம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றக்கூடும். பழைய கடன்காரர்களின் மறைமுகத் தொல்லை இருக்கும். பெண்களுக்கு சிறிய மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் பெற சிறிதுகாலம் பொறுமையாக இருப்பது அவசியம். பங்குச்சந்தையில் லாபம் பெற நண்பர்கள் வழிகாட்டுவர்.
பரிகாரம்:- வெள்ளிக்கிழமை அன்று அம்பாள் சன்னிதியில் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.