மீனம் - வார பலன்கள்
கற்பனை வளம் நிறைந்த மீன ராசி அன்பர்களே!
எதையும் சிந்தித்து முடிவெடுப்பது நன்மை தரும். பண விஷயத்தில் வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு பெற எவ்வளவு முயற்சி செய்தாலும் அது பலனளிக்காது. எனவே அன்றாட பணிகளைச் சரியாக செய்து அதிகாரிகளிடம் நற்பெயர் பெற முயற்சி செய்யுங்கள்.
தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் படிப்படியான வளர்ச்சியை அடைவார்கள். ஆனால் வருமானம் திருப்தி தராத நிலையே தொடரும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், புதிய தொழில் தொடங்குவது பற்றி கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள்.
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும், பொருளா தாத்தில் நிறைவு இருக்காது. அரசியல் துறையில் சிலருக்கு, பெருமைமிகு பதவிகள் கிடைக்கலாம். பெண்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. பயணங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.
பரிகாரம்:- சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபட்டால் தொல்லைகள் நீங்கும்.