மீனம் - வார பலன்கள்
நினைத்த காரியங்களை சிறப்பாக செய்யும் மீன ராசி அன்பர்களே!
உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டும், சகப் பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். மின்சாரம், நெருப்பு போன்றவற்றில் பணியாற்றுவோர் எச்சரிக்கையாக இருங்கள். தொழில் செய்பவர்கள், வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்களது வெற்றிக்கு, சில பெரிய மனிதர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வார்கள். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாவிட்டால் துன்பங்களை அனுபவிக்க வேண்டியதிருக்கும்.
குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே சுமுகமான நிலை காணப்படும். பணிபுரியும் பெண்கள், உயர் அதிகாரிகளின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடப்பது நல்லது.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் துன்பங்கள் விலகும்.