மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 26 Jan 2023 7:56 PM GMT (Updated: 26 Jan 2023 7:56 PM GMT)

ஜோதிடத்தில் ஆர்வம் கொண்ட மீன ராசி அன்பர்களே!

எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றமான பலன்கள் காணப்படும். செயல்களில் குழப்பம் ஏற்பட்டால், நிதானமான போக்கைக் கடைப்பிடிக்கவும். உத்தியோகத்தில் சிலருக்கு, பணிபுரியும் அலுவலகத்திலேயே பதவி உயர்வு ஏற்படலாம்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய உத்திகளைக் கையாண்டு வேலைகளை விரைவாகச் செய்து கொடுப்பார்கள். பண வரவுகளில் திருப்தியான போக்கு காணப்படும். கூட்டு வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கலாம். பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்படும். பெண்களில் சிலருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் பங்கு பெறுவார்கள். பங்குச்சந்தை வியாபாரம் ஓரளவு லாபம் தருவதாக அமையும்.

பரிகாரம்:- புதன்கிழமை ஹயக்ரீவ பெருமாளுக்கு, துளசிமாலை சூட்டி, அர்ச்சனை செய்தால் நன்மைகள் நடைபெறும்.


Next Story