மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
தினத்தந்தி 10 Feb 2023 12:59 AM IST (Updated: 10 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

அனைவரிடமும் கனிவாக பேசும் மீன ராசி அன்பர்களே!

சனிக்கிழமை காலை 10.47 முதல் திங்கள் மாலை 4.42 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிலும் கவனம் தேவை. உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும், அதிக வேலைப்பளுவால் தொல்லைகளை சந்திக்க நேரிடலாம்.

சொந்தத்தொழிலில் கவனக்குறைவான செயல்பாடுகளால், வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரம் நன்கு நடைபெற்றாலும், எதிர்பார்க்கும் லாபம் இல்லாமல் போகலாம். தொழில் முன்னேற்றம் பற்றி கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள். பங்குச்சந்தையில் லாபம் அதிகம் இருக்காது. கலைஞர்கள், பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள். எதிர்பார்க்கும் வரவு இல்லாவிட்டாலும் பணியில் திருப்தி இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் தொடர்பான விஷயங்களில் கவனமுடன் நடந்துகொள்ளுங்கள்.

பரிகாரம்:- தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை நெய் தீபமிட்டு வழிபட்டால் வந்தவினை பறந்தோடும்.


Next Story