மீனம் - வார பலன்கள்
அச்சமில்லாத உள்ளம் படைத்த மீன ராசி அன்பர்களே!
இதுவரை இருந்து வந்த தொல்லைகள் குறைய ஆரம்பிக்கும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வாழ்வில் மனமகிழ்ச்சியும் மன நிம்மதியும் கிடைக்கும். காரியங்களில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும், பெரிய பாதிப்பு நிகழாது. உங்கள் சக்திக்கு மீறி வாக்குறுதி கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ வேண்டாம்.
மனதிற்குள் புதிய ஒளி உண்டாகி, உங்கள் எதிர்காலத் திட்டம் பற்றி சிந்திக்க வைக்கும். தவறுகளைக் கண்டு ஆத்திரம் கொள்ளும் நீங்கள், தற்சமயம் அமைதியை கடைப்பிடிப்பதுதான் நல்லது. பட்டம், பதவி உங்களைத் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு சில பொறுப்பான பதவிகள் கிடைக்கலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களை மனதில் வைத்து செயல்படுங்கள். பணிபுரியும் பெண்கள், கவனமாக செயல்படுவது நல்லது.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, கந்தசஷ்டி கவசம் படித்து வழிபாடு செய்யுங்கள்.