மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
தினத்தந்தி 3 March 2023 1:44 AM IST (Updated: 3 March 2023 1:47 AM IST)
t-max-icont-min-icon

வார ராசி பலன்கள் 3.3.2023 முதல் 9.3.2023 வரை

தன்னம்பிக்கையோடு செயல்படும் மீன ராசி அன்பர்களே!

முயற்சியோடு செய்யும் காரியங்களில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் முன்னேற்றமான மாற்றங்களைச் சந்திப்பார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து பணியிட மாற்றம் கிடைக்கக்கூடும். சொந்தத்தொழில் நன்றாக நடைபெறும். கூட்டுத்தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகளை எதிர்கொள்ளும் புதிய சூழ்நிலையில் வெற்றி அடைவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் வழக்கமான லாபம் கிடைக்கும். கலைஞர்கள், புதிய வாய்ப்புகள் கிடைத்து, வெளியூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரலாம். பணியில் சுறுசுறுப்பாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உறவினர்களும், நண்பர்களும் உதவிக்கரம் நீட்டத் தயாராக இருப்பார்கள். சுபநிகழ்ச்சிகளுக்கு சுற்றத்தார் ஆதரவு கிடைக்கலாம். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.

பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு நெய் தீபமிட்டு வழிபடுவது மனோதிடத்தை அதிகரிக்கும்.


Next Story