மீனம் - வார பலன்கள்
ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட மீன ராசி அன்பர்களே!
வரவேண்டிய வரவுகளுக்காக அலைச்சல்களை மேற்கொள்ளும் நிலை ஏற்படும். பழைய நண்பர் ஒருவரை சந்திப்பதால் லாபமடைவீர்கள். முக்கிய தகவல் கிடைத்து வெளியூர் பயணம் உருவாகும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இல்லாவிட்டால், உயரதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட்டால், பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் குறையை நிவர்த்தி செய்ய வேண்டியநிலை உருவாகும்.
கூட்டுத்தொழில் செய்பவர்கள், போட்டியாளர்களால் வியாபாரத்தில் ஏற்றத் தாழ்வுகளைச் சந்திப்பார்கள். குடும்பத்தில் பெண்கள் சிலருக்கு ஆரோக்கிய குறை ஏற்பட்டு, சிறிய மருத்துவ உதவி தேவைப்படும். கலைஞர்களுக்கு, வேறு ஒருவர் மூலம் வாய்ப்பு கிடைத்து மன உளைச்சல் ஏற்படும்.
பரிகாரம்:- இந்த வாரம் முழுவதும் ஸ்ரீராமஜெயம் எழுதி, ஆஞ்சநேயரை வழிபட்டால் குறைகள் அகலும்.