மீனம் - வார பலன்கள்

தெளிவான சிந்தனை கொண்ட மீன ராசி அன்பர்களே!
நற்பலன்கள் தொடர்ந்து நடைபெறக்கூடிய வாரம் இதுவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வருமானத்திலும் மன நிறைவு கிடைக்கும். மாணவர்கள், தேர்வுகளில் அக்கறை செலுத்துவார்கள்.
கலைஞர்களுக்குப் பொருளாதார உயர்வு ஏற்படக்கூடிய வகையில் புதிய வாய்ப்புகள் அமையும். அரசியல்வாதிகள் பரபரப்பாக இயங்கி வரக்கூடிய அவசியம் உருவாகும். கூட்டுத்தொழில் வியாபாரம் லாபகரமாகவே நடைபெற்று வரும். பெண்களின் அக்கறையால் குடும்பத்தில் சச்சரவுகள் தவிர்க்கப்படும். குடும்ப விவகாரங்களில் மூன்றாவது நபர் தலையிட அனுமதிக்காமல் இருப்பது நல்லது. தந்தையின் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நேரம் இது. பயணங்களால் பலன் உண்டு.
பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை அன்று ஹயக்ரீவருக்கு மலர் மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.