மீனம் - வார பலன்கள்
நேர்மறை எண்ணம் நிறைந்த மீன ராசி அன்பர்களே!
முயற்சி செய்யும் செயல்கள் பலவற்றில் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். சில செயல்கள் தகுந்த நபர்கள் இல்லாத காரணத்தால் தள்ளிப் போகலாம். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு பதவியில் உயர்வு ஏற்படலாம். பொறுப்புகள் அதிகமாகும். அவசர வேலைகள் அல்லல் தருவதாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். ஓய்வில்லாமல் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு, போதிய லாபம் வந்துசேரும். பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத் தொகையை வழங்குவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும், பெரிய பாதிப்புகள் ஏற்படாது. கலைஞர்கள், புதிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொருளாதாரத்தைப் பெருக்குவர். சகக் கலைஞர்களுக்கு பண உதவி செய்ய நேரிடும். பங்குச்சந்தை வியாபாரம் நன்றாக நடைபெறும்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு மலர் மாலை சூட்டுங்கள்.