மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 7 April 2023 1:45 AM IST (Updated: 7 April 2023 1:49 AM IST)
t-max-icont-min-icon

அமைதியும், ஆற்றலும் நிறைந்த மீன ராசி அன்பர்களே!

வெள்ளி முதல் ஞாயிறு காலை 8.14 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், 'நாளைக்குச் செய்யலாம்' என்று தள்ளி வைத்த வேலை ஒன்றை, பல இடர்பாடுகளுக்கு மத்தியில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். சொந்தத்தொழில் செய்பவர்கள் சிரமத்தின் மூலமே, காரியங்களைச் செய்ய வேண்டி இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்தாலும், அவற்றை உடனடியாக செய்து முடிக்க முடியாது. கூட்டுத் தொழிலில் பணியாளர்களின் சுறுசுறுப்பால், வியாபாரம் நன்கு நடைபெறும். எதிர்பார்க்கும் லாபம் குறையாது. கூட்டாளிகளிடம் சொந்த விஷயங்களைப் பேசி தொல்லைகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும். பெண்கள் உணவு தயாரிக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். கலைஞர்கள் சிரமத்தின் பேரிலேயே புதிய ஒப்பந்தங்களைப் பெற முடியும். பங்குச்சந்தை லாபம் தரும்.

பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை சூட்டுவதோடு, நெய் தீபமும் ஏற்றி வணங்குங்கள்.


Next Story