மீனம் - வார பலன்கள்
நேர்மையில் அதிக பற்றுதல் கொண்ட மீன ராசி அன்பர்களே!
தீவிரமான முயற்சிகளோடு செயல்பட்டு உங்கள் காரியங்களில் வெற்றி காண்பீர்கள். சில காரியங்களில் வெற்றியடைய இன்னும் அதிக முயற்சிகள் தேவைப்படலாம். சிறுசிறு தடைகளால் பணம் கைக்கு வரத் தாமதமாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு அலுவலகத்திலேயே பதவி உயர்வும், புதிய பொறுப்புகளும் கிடைக்கக்கூடும். சிலருக்கு எதிர்பார்த்த அலுவலகக் கடன்தொகை கிடைத்து, பாதியில் நிறுத்தியிருந்த பணியைத் தொடருவீர்கள்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளரின் அவசரம் கருதி நவீன கருவிகளின் துணைகொண்டு, விரைவாகப் பணியை முடித்துக்கொடுப்பீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு மனக்குறை ஏற்பட்டு அகலும். கலைஞர்கள் தங்கள் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவார்கள். பங்குச்சந்தையில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காமல் போகலாம்.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு, செந்தாமரை மலர் மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றுங்கள்.