மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 21 April 2023 1:39 AM IST (Updated: 21 April 2023 1:39 AM IST)
t-max-icont-min-icon

நேர்மை தவறாத மனம் கொண்ட மீன ராசி அன்பர்களே!

முயற்சியால் முன்னேற்றமும், செயல்களில் வெற்றியும் ஏற்படும். சில செயல்களில் திருப்தியான சூழ்நிலை இல்லாமல் போகலாம். அவசரமாக முடிக்க வேண்டிய வேலைகளால் சிரமங்களை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்களில் சிலர் அதிக வருமானமுள்ள புதிய வேலைக்குச் செல்ல முயற்சி மேற்கொள்வர். சக ஊழியர்களைப் பற்றியும், அலுவலகம் பற்றியும் தேவையற்று பேசுவதால் பிரச்சினை உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் சிலருக்கு, புதிய வேலைகள் கிடைத்து பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவர். கூட்டுத் தொழில் முயற்சியில் முன்னேற்றமான பலன்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி இருந்தாலும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். பயணத்தின்போது விலைஉயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்தாலும் போதிய லாபம் இருக்காது.

பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு, செந்தாமரை மலர் மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.


Next Story