மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 28 April 2023 2:14 AM IST (Updated: 28 April 2023 2:17 AM IST)
t-max-icont-min-icon

இனிமையாக பழகும் குணம் நிறைந்த மீன ராசி அன்பர்களே!

வியாழக்கிழமை காலை 9.22 மணி முதல் சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் நிதானம் தேவை. மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகள் மறையும். உங்கள் செயல் மற்றவரால் பாராட்டப்படும். சில பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு கிடைக்கும். பண வரவுகள் இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். கைநழுவிப்போன காரியம் ஒன்று எதிர்பாராமல் நன்றாக நடைபெறக்கூடும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள், சக நண்பர்களின் வேலையையும் சேர்த்து செய்யும் நிலை ஏற்படலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய நபர்கள் மூலம், அதிக வேலைகளைப் பெறுவார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கக்கூடும். பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி உற்சாகம் அளிப்பீர்கள். குடும்பத்தில் சீரான போக்குக் காணப்படும். பங்குச்சந்தை வியாபாரம் நன்கு நடைபெறும்.

பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றுங்கள்.


Next Story