மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 5 May 2023 1:42 AM IST (Updated: 5 May 2023 1:43 AM IST)
t-max-icont-min-icon

நீதி நெறிகளுக்குக் கட்டுப்பட்டு வாழும் மீன ராசி அன்பர்களே!

முயற்சிகளோடு பல செயல்களில் ஈடுபட்டாலும், சிலவற்றில் மட்டுமே எதிர்பார்க்கும் பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறிது அலைச்சலுக்குப் பின்னர் கிடைக்கலாம். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிகளில் ஏற்படும் சிறிய தவறுகள், பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். சக ஊழியர்களிடம் வீண் பேச்சுகளால் கருத்துவேறுபாடு தோன்றலாம். சொந்தத் தொழிலில் அவசர வேலைகளை ஓய்வின்றி செய்தாலும், குறிப்பிட்ட காலத்தில் வாடிக்கையாளருக்குத் தரமுடியாமல் போகலாம். கூட்டுத்தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்றாலும், வழக்கமான லாபமே கையில் கிடைக்கும். குடும்பத்தில் பழைய கடன் தொல்லை தரும். சகோதர வழி இல்லங்களுக்குச் செல்லும் பெண்கள், வீண் பேச்சுக்களால் மனக்கசப்பை சந்திப்பர். பங்குச்சந்தை சுமாரான லாபம் தரும்.

பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை மாரியம்மனுக்கு மலர் மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றுங்கள்.


Next Story