மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 12 May 2023 1:29 AM IST (Updated: 12 May 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

நீதி நேர்மையுடன் எல்லோரிடமும் பழகும் மீன ராசி அன்பர்களே!

தீவிர முயற்சியோடு செயல்பட்டு, எடுக்கும் காரியங்களில் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர், அதிக ஆதாயமுள்ள புதிய வேலைக்குச் செல்லக்கூடும். பணப்பொறுப்பில் உள்ளவர்கள், பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தாவிட்டால் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். சொந்தத் தொழிலில் ஈடுபடுவோர் அதிகப் பணிகளால் அல்லல்படுவர். கூட்டுத் தொழில் செய்பவர்கள், நவீனமான முறையில் தொழில்களைச் செய்ய பங்குதாரர்களோடு கூடி ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்பட்டாலும், சிறு சிறு சிரமங்களும் இருக்கத்தான் செய்யும். வேலை செய்யும் பெண்களுக்கு விரும்பிய இடமாறுதல் கிடைக்கும். கலைஞர்கள், புதிய வாய்ப்புகள் மூலம் புகழும், பொருளும் பெறுவர். சகக்கலைஞர்கள் ஆதரவு இருக்கும். பங்குச்சந்தை வர்த்தகம் முன்னேற்றம் தரும்.

பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள்.


Next Story