மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 19 May 2023 1:32 AM IST (Updated: 19 May 2023 1:34 AM IST)
t-max-icont-min-icon

உற்சாகத்தோடு செயல்படும்மீன ராசி அன்பர்களே!

காரியங்களில் வெற்றிபெற நண்பர்களின் ஒத்துழைப்பை நாடிச் செல்வீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்வது பற்றி ஆலோசிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், சகப் பணியாளர்களின் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டியதிருக்கும். சொந்தத்தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளரின் வேலையை அவசரமாகச் செய்து கொடுக்க நேரிடும். கூட்டுத்தொழிலில், பணியாளர்களின் சுறுசுறுப்பு காரணமாக லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அவற்றை சாமர்த்தியமாக சமாளித்துவிடுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சிறு தொல்லைகள் இருந்தாலும், பாதிப்பு ஏற்படாது. குலதெய்வ வழிபாடு செய்ய குடும்பத்தோடு வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள். கலைஞர்கள், சுறுசுறுப்பாக பணியாற்றுவர்.

பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டி வழிபடுங்கள்.


Next Story