மீனம் - வார பலன்கள்
உறுதியான எண்ணம் கொண்ட மீன ராசி அன்பர்களே!
இந்த வாரம் வெள்ளிக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் கவனம் தேவை. எதிர்பார்த்த விஷயங்களில் சற்று தளர்ச்சி தோன்றும். நினைத்த காரியத்தை சாதிக்க, உறவினர்கள் கைகொடுத்து உதவுவர். சுபகாரியம் சம்பந்தமாக எடுத்த முயற்சி நல்ல திருப்பத்தைத் தரும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பாராட்டும், புகழும் கிடைக்கும். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எதிர்பாராத வகையில் மகான்களின் தரிசனம் உண்டாகும். பழைய கடன்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். காவல் துறையில் உள்ளவர்களுக்கு, பெயர், புகழ், கவுரவம் தேடி வரும். கலைஞர்கள், தங்கள் துறையில் புதிய ஒப்பந்தங்களைப் பெற தீவிரமாக முயற்சிப்பர். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை சில காலம் நிறுத்தி வைப்பது நல்லது. நீண்டகால மன சஞ்சலம் முடிவுக்கு வரும்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி, சிவப்பு மலர் மாலை சூட்டுங்கள்.