மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 8 Jun 2023 7:58 PM GMT (Updated: 8 Jun 2023 7:59 PM GMT)

திட்டமிட்டு செயலாற்றும் மீன ராசி அன்பர்களே!

முயற்சிகளில் ஏற்படும் தாமதங்களை சவாலாக ஏற்று பணியாற்றுவீர்கள். பண வரவுகள் தள்ளிப்போகலாம். சகோதர வழி உறவுகளில் நன்மை ஏற்படும். பயணங்களால் அலைச்சலும், செலவும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு அவசரமாக செய்த பணியொன்றில் ஏற்பட்ட தவறால், மனவருத்தம் வந்துசேரும். உயர் அதிகாரிகளின் விருப்பப்படி பணியை விரைந்து செய்ய வேண்டியதிருக்கும்.

சொந்தத்தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்க, சிறிது காலம் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வரவேண்டிய பணத்துக்காக அலைச்சலை சந்திக்க நேரலாம். கூட்டுத்தொழில் சில சிரமங்களோடு நடை பெறும். கூட்டாளிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் தலைதூக்கும். கலைஞர்கள், பணிக்காக வெளிநாடு செல்ல வேண்டியது வரலாம்.

பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சந்திர பகவானுக்கு வெண்மையான மலர் மாலை சூட்டி வழிபட்டு வாருங்கள்.


Next Story