மீனம் - வார பலன்கள்
செய்யும் காரியங்களில் வெற்றி பெறும் மீன ராசி அன்பர்களே!
புதன் மற்றும் வியாழன் சந்திராஷ்டமம் உள்ளதால் சற்று பதற்றம் ஏற்படலாம். பணப்பரிவர்த்தனையில் நிதானம் தேவை. சொந்த பந்தங்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நன்மை தரும். உத்தியோகஸ்தர்கள் நிதானமாகவும், பொறுமையாகவும் தங்கள் பணிகளில் ஈடுபடவேண்டும்.
சொந்தமாகத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து நிலுவையை வசூலிப்பதில் தாமதம் ஏற்படலாம். பணியாளர்களின் வேலையை கண்காணித்து வருவது நல்லது. கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள், வியாபாரத்தில் அதிக அக்கறை காட்டுவது அவசியம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெண்களே சாமர்த்தியமாகச் சமாளித்து விடுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் திருப்பம் வரும். கலைத்துறையினர் வாய்ப்புகளைப் பெற அதிகம் முயற்சிக்க வேண்டியதிருக்கும்.
பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை நவக்கிரகத்தில் உள்ள சந்திர பகவானுக்கு நெய் தீபமிட்டு வழிபடுங்கள்.