மீனம் - வார பலன்கள்
பிறரிடம் சாமர்த்தியமாக வேலை வாங்கும் மீன ராசி அன்பர்களே!
வெள்ளிக்கிழமை காலை 7.53 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உறவினர் மற்றும் நண்பர்கள் எதிர்பார்த்த உதவியை செய்வதால், ஓரளவு பிரச்சினைகள் தீரும். எதிர்கால வாழ்விற்கு ஏற்ற திட்டங்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் நல் ஆதரவால் நலம் பல சேரும். சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய நபரின் அவசர வேலையை செய்து கொடுக்க ஓய்வின்றிப் பணிகளில் ஈடுபடுவார்கள். கூட்டுத்தொழில் வியாபாரம் சுமாராக நடைபெற்றாலும், வழக்கமான லாபம் குறையாது. பண முதலீடுகள் லாபகரமாக அமையும். புதிய உபகரணங்கள் வாங்கவும் வாய்ப்புண்டு. குடும்பம் சிறுசிறு பிரச்சினைகளுடன் நடைபெறும். கலைஞர்கள் பணிகளில் உற்சாகமாக ஈடுபட்டாலும், வருமானம் போதுமானதாக இருக்காது.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு கந்த சஷ்டி கவசம் பாடி, அகல் விளக்கு தீபமிடுங்கள்.