மீனம் - வார பலன்கள்
கலை ஆர்வம் மிகுந்த மீன ராசி அன்பர்களே!
உங்கள் முயற்சிகள் பலவற்றில் வெற்றிகரமான போக்கு காணப்படும். தளர்வடைந்த காரியங்களில், தீவிர முயற்சியுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தனவரவுகள் குறிப்பிட்ட காலத்தில் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, திறமையைப் பாராட்டி முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளர் வருகையால் பொருளாதார முன்னேற்றம் பெறுவர். பணிகள் அதிகரிப்பதால் காலம் பார்க்காமல் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். புதிய கிளைகள் தொடங்கக் கூட்டாளிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பீர்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகளும் காணப்படலாம். கலைஞர்கள், பிரபல நிறுவனங்களில் இருந்து புதிய ஒப்பந்தங்கள் பெற்று உற்சாகமாக பணியாற்றுவர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு மஞ்சள் வண்ண வஸ்திரம் சூட்டி வழிபடுங்கள்.