தனுசு - வார பலன்கள்


தனுசு - வார பலன்கள்
தினத்தந்தி 7 July 2023 12:44 AM IST (Updated: 7 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

07-07-2023 முதல் 13-7-2023 வரை

உற்சாகத்துடன் பணியாற்றும் தனுசு ராசி அன்பர்களே!

பல செயல்கள் உங்கள் விருப்பம் போல நடைபெறுவதால், மனதில் உற்சாகம் உண்டாகும். தளர்வடைந்த செயல்களை, பிறகு செய்யலாம் என்று தள்ளி வைப்பீர்கள். வரவேண்டிய தொகை அதிக சிரமமின்றி கைக்கு வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து பாதியில் நிறுத்தியிருந்த பணியைத் தொடருவார்கள்.

சொந்தத் தொழில் செய்பவர், புதிய வேலையை நவீனக் கருவிகளின் உதவியுடன் விரைவாகச் செய்து கொடுப்பார்கள். எதிர்பார்க்கும் வருமானம் குறையாது. கூட்டு வியாபாரம் நன்றாக நடைபெறும். தொழில் விரிவாக்கம் பற்றி கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டாலும், குடும்பத்தவர்களே சமாளித்துக் கொள்வார்கள். கலைத்துறையினர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வர்.

பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு கருநீல மலர் மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபமிடுங்கள்.


Next Story