தனுசு - வார பலன்கள்
கற்பனை வளம் நிறைந்த தனுசு ராசி அன்பர்களே!
உங்கள் முயற்சியால் இடையூறுகள் அகன்று இன்பம் கூடும். உத்தியோகஸ்தர்கள் சம்பள உயர்வு, பதவி ஏற்றம் பெற்று, வேறு இடங்களுக்கு மாறுதலாகிச் செல்வர். சொந்தத் தொழிலில் இதுவரை இருந்து வந்த மந்தமான நிலைமாறும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், தொழிலை மேம்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்துவர். மூலதனத்தை அதிகப்படுத்தி தொழில் வளர்ச்சி பெற முயற்சிப்பீர்கள்.
கலைஞர்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும்போது அவற்றை கவனமாக படித்துப் பார்ப்பது நல்லது. பழைய பணிகளின் திறமையைப் பாராட்டி புதிய அழைப்புகள் பெறுவீர்கள். குடும்பத்தில் கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். நவீன சாதனங்களை வாங்கி குடும்பத்தினரை மகிழ்விப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரிகள் ஏற்றம் பெறுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை சிவபெருமானை தரிசித்து, பூஜைக்குரிய பொருட்களை வாங்கிக் கொடுங்கள்.