தனுசு - வார பலன்கள்


தனுசு - வார பலன்கள்
x
தினத்தந்தி 4 Aug 2023 12:52 AM IST (Updated: 4 Aug 2023 12:54 AM IST)
t-max-icont-min-icon

4.8.2023 முதல் 10.8.2023 வரை

எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் தனுசு ராசி அன்பர்களே!

சில செயல்களில் முக்கிய நண்பர்களின் உதவி கிடைக்காமல் போகலாம். திட்டமிட்ட பண வரவுகளும் சிறிது தள்ளிப்போகும். பயணங்களில் கவனமாக இல்லாவிட்டால், இழப்புகளைச் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உங்கள் பொறுப்புகளில் கவனம் செலுத்தாவிட்டால் உயரதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

சொந்தத் தொழிலில், செய்து கொடுத்த பணியில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொடுப்பீர்கள். கூட்டு வியாபாரத்தில் லாபம் வழக்கம் போல காணப்படும். பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய கூட்டாளிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பீர்கள். குடும்பத்தில் சீரான போக்கு காணப்படும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவார்கள். கலைஞர்கள் வாய்ப்புகளைப் பெற தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்குங்கள்.


Next Story