தனுசு - வார பலன்கள்
மற்றவர்களின் மனம் அறிந்து பழகும் தனுசு ராசி அன்பர்களே!
திங்கள் காலை 6.55 மணி முதல் புதன் மாலை 6.23 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் பண விஷயங்களில் கவனம் தேவை. எதிர்பார்க்கும் முக்கிய காரியங்கள் தள்ளிப்போக நேரிடும். உத்தியோகத்தில் சுமுகமான போக்கு காணப்படும். மலைபோல் குவிந்த வேலைகளை தீவிர முயற்சியோடு செய்து முடித்து பாராட்டுப் பெறுவீர்கள். அலுவலகத்தில் கேட்டிருந்த கடனுதவிகள் வந்து, பாதியில் விட்டிருந்த வேலையைத் தொடரலாம். சொந்தத்தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் வழக்கமான லாபத்தைக் காட்டிலும் சிறிது லாபம் கூடும். குடும்பம் சிறு, சிறு பிரச்சினைகளைச் சந்தித்தாலும், சீராகவே நடைபெறும். சிறிய கடன்களைத் தீர்த்துத் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். கலைஞர்கள் பிரபல நிறுவனத்திலிருந்து புதிய ஒப்பந்தம் பெற்று மகிழ்வர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துா்க்கைக்கு சிவப்பு நிற மலர் மாலை சூட்டி வழிபடுங்கள்.