தனுசு - வார பலன்கள்
உயர்வான எண்ணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற, நெருங்கிய உறவினர்கள் கைகொடுப்பார்கள். என்றாலும், சில செயல்களில் மட்டுமே எதிர்பார்க்கும் திருப்தியை அடைய முடியும். வரவேண்டிய பணவரவுகளைப் பெற சிறிது அலைச்சல் இருக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் விடுமுறையால் வேலைப்பளு அதிகாிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்க்கும் பணவரவு தள்ளிப்போகும்.
சொந்தத் தொழிலில், பழைய வாடிக்கையாளர்களால் புதிய நபர் அறிமுகமும், அதன் மூலம் வருவாயும் கிடைக்கும். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையலாம். குடும்பத்தின் பழைய கடன் தொல்லைகளால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். கலைஞர்கள், தங்கள் பணிகளில் கவனமாக இல்லாமல் சிறு விபத்துகளை சந்திக்க நேரிடும். பங்குச்சந்தை வியாபாரம் லாபம் தரும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் சூட்டி வணங்குங்கள்.