தனுசு - வார பலன்கள்
20-10-2023 முதல் 26-10-2023 வரை
காரியத்தில் கவனம் காட்டும் தனுசு ராசி அன்பர்களே!
தீவிர முயற்சிக்குப் பின் காரியங்கள் வெற்றியாகும். திட்டமிட்டபடி பணவரவு வந்துசேரும். பூர்வீக சொத்துக்கள் வந்து சேருவதோ அல்லது அவைகளின் மூலம் பொருளாதார வரவுகளோ ஏற்படலாம். வெளியூரில் இருந்து நல்ல தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். வேலையில் கவனமாக இல்லாவிட்டால், உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். சக ஊழியரின் பணியையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் ஏற்படும். கூட்டுத்தொழில் வியாபாரம், சிறப்பாக நடைபெற்று நல்ல லாபம் பெறுவீர்கள். தொழில் போட்டிகள் குறையும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். கலைஞர்கள், பிரபல நிறுவனங்களிடம் இருந்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமைபுத பகவானுக்கு பச்சைப் பயறு நைவேத்தியம் செய்யுங்கள்.