தனுசு - வார பலன்கள்
இந்த வாரம் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை காலை 10:36 வரை சந்திராஷ்டமம் உள்ளதால் தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி இருங்கள். நண்பர்கள் உதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் விருப்பப்படி, புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள நேரலாம். பணப்பொறுப்பில் உள்ளவர்கள் கவனமாக நடந்து கொள்வது நல்லது. சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களிடம் அதிக அக்கறை காட்டுவீர்கள். கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தினரிடம் பொறுமையாக நடந்து கொள்வது அவசியம். குடும்ப நிகழ்ச்சியில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் பெறும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மகிழ்ச்சி தரும். பங்குச்சந்தையில் வியாபாரம் சுமாராக நடைபெறும். இந்த வாரம் சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபமிட்டு அனுமன் வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.