தனுசு - வார பலன்கள்
இனிமையாக பழகும் தனுசு ராசி அன்பர்களே!
உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு, உயரதிகாரிகளின் விருப்பப்படி முக்கிய நபரின் வேலையை உடனடியாக செய்து கொடுக்க நேரிடும். சொந்தத் தொழில் சுறுசுறுப்பாக நடைபெறும். பழைய வாடிக்கையாளர் மூலம் புதிய நபர் அறிமுகம் கிடைக்கப்பெறும். கூட்டுத்தொழில் முயற்சியில் எதிர்பார்க்கும் லாபம் வந்து சேரும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லுங்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் சிறிது முன்னேற்றம் காணக்கூடும். பங்குகளை வாங்கும் போது அதன் ஸ்திரத்தன்மையை ஆராய்ந்து வாங்குங்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் பங்கு கொள்ள வெளியூர் செல்ல நேரலாம். பண வரவுகள் அதிகமாகும். குடும்பத்துக்கு தேவையான நவீன கருவிகளை வாங்குவீர்கள். குடும்பத்தில் சீரான போக்கு காணப்படும். சிறுசிறு பிரச்சினைகளை அதிகத் தொல்லை இல்லாமல் சமாளித்து விடுவீர்கள்.
பரிகாரம்:- துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை நெய் தீபமிட்டு வழிபாடு செய்து வந்தால் பிரச்சினைகள் நீங்கும்.