தனுசு - வார பலன்கள்


தனுசு - வார பலன்கள்
தினத்தந்தி 18 Nov 2022 12:59 AM IST (Updated: 18 Nov 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

உயர்வான எண்ணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

வீடு சம்பந்தமான பிரச்சினை தீருவதுடன், பரம்பரை சொத்துக்களை அடையும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு அசையாச் சொத்துகள் லாபம் தரும். அது பூமியாகவோ அல்லது கட்டிய வீடாகவோ இருக்கலாம். பல நாட்களாக எதிர்பார்த்து வந்த, ஏதோ ஒரு விஷயத்தில் வெற்றி கிடைக்கும். நெருப்பில் பணிபுரிபவர்கள் கவனமாக செயல்படுங்கள். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த தெய்வத்தை தரிசிப்பீர்கள். யாருக்காகவும், எதற்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போடுவதை தவிர்ப்பது நல்லது. பழைய நகைகளை புதுப்பிக்க, புதிய வாகனம் வாங்க வாய்ப்பு உருவாகும். மின்சார உபகரணங்களை ஜாக்கிரதையாக கையாளுங்கள். எந்த காரியத்தையும் செய்யும் முன்பாக, நம்பிக்கையுள்ளவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால், நினைத்த காரியம் கைகூடும்.


Next Story