தனுசு - வார பலன்கள்
உற்சாகமும் தன்னம்பிக்கையும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
நெருங்கிய நண்பர்கள் உதவியுடன் முக்கியமான சில காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். வீடு அல்லது மனை வாங்கும் திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த சில சலுகைகளை உயர் அதிகாரிகளின் மூலம் பெறுவீர்கள். அலுவலகத்திற்கு புதியதாக வரும் நபரிடம் ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டாம். சுயதொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும் என்றாலும் சிக்கனம் அவசியம். கூட்டுத் தொழிலில் அதிகம் லாபம் பெற கூட்டாளிகளுடன் ஆலோசித்து முடிவெடுங்கள். குடும்பத்தில் செலவுகள் இருந்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. கலைத்துறையினர் நல்ல திருப்பத்தைக் கண்டு மகிழ்வீர்கள். பங்குச் சந்தையில் நஷ்டமடைந்த பங்குகள் லாபமாக மாறக்கூடிய காலம் இது.
பரிகாரம்:- சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு பவளமல்லி கொண்டு அர்ச்சிப்பதால் எதிரி பயம் விலகும்.