தனுசு - வார பலன்கள்
கவலைகளை மறந்து புன்னகையுடன் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே!
உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் தென்பட்டாலும், தடை, தாமதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. உத்தியோகஸ்தர்கள், தங்கள் பதிவேடுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அவசியம். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். சொந்தத்தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கலாம். புதிய நபர்களின் அறிமுகம் பலன் தரும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. பங்குச்சந்தையில், பங்குகளை அவசரப்பட்டு விற்க வேண்டாம். கலைஞர்களுக்கு எதிர்பார்க்கும் ஆதாயம் இருக்காது. புதிய வாய்ப்புகள் பெற சிறிது காலம் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். பெண்களுக்கு எதிர்பார்த்த சுபகாரியங்கள் தள்ளிப்போகலாம். சொத்துக்கள் வாங்குவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். இடமாற்றங்களில் நிதானப் போக்கு அவசியம்.
பரிகாரம்:- குரு பகவானுக்கு வியாழக்கிழமை நெய் தீபமிட்டு வணங்கினால் வாழ்வு வளமாகும்.