தனுசு - வார பலன்கள்


தனுசு - வார பலன்கள்
x
தினத்தந்தி 23 Dec 2022 1:23 AM IST (Updated: 23 Dec 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

செயல்களில் உற்சாகம் காட்டும் தனுசு ராசி அன்பர்களே!

கையில் எடுக்கும் காரியங்களில் கவனமாக செயல்படுதல் அவசியம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகம் தொடர்பான விஷயங்களில் உடனடியாக நன்மையை எதிர்பார்க்க இயலாது.

தொழில் செய்பவர்கள், வேலைப்பளு அதிகரிப்பதாக உணர்வீர்கள். வருமானம் அதிகரிப்பதால் கவலைகளை மறப்பீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் திருப்திகரமாகவே நடைபெறும். கலைஞர்களுக்கு சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அரசியல் துறையினர் எதிலும் அவசரமின்றி செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பாலும், சரளமான பணப் புழக்கத்தாலும் குடும்ப நிர்வாகத்தில் பெண்களுக்குப் பிரச்சினை எதுவும் வராது. கணவன்- மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். உறவினர் வகையில் சுபநிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும். மறைமுக எதிரிகள் விலகுவார்கள்.

பரிகாரம்:- திங்கட்கிழமை சிவாலயம் சென்று சிவபெருமானை தரிசனம் செய்தால் சிரமங்கள் குறையும்.


Next Story