தனுசு - வார பலன்கள்


தனுசு - வார பலன்கள்
x
தினத்தந்தி 6 Jan 2023 1:46 AM IST (Updated: 6 Jan 2023 1:47 AM IST)
t-max-icont-min-icon

உற்சாகத்துடன் உழைக்கக்கூடிய தனுசு ராசி அன்பர்களே!

சனி இரவு 8.50 மணி முதல் செவ்வாய் காலை 8.32 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், நன்மையும், தொல்லையும் கலந்தே காணப்படும். தொல்லைகளை சமாளிக்கும் மனப்பக்குவமும் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகளைப் பெறுவதில் தடைகள் தோன்றும். இருப்பினும் அதற்கிணையான சலுகைகளைப் பெறுவீர்கள்.

தொழில் செய்பவர்கள், முன்னேற்றமான நிலையை அடைவார்கள். அதே நேரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படவும் வாய்ப்புண்டு. கலைஞர்களுக்கு, புதிய வாய்ப்புகள் அமைவது கடினம். ஆனாலும் வருவாயில் எந்தவித குறைவும் இருக்காது.

குடும்பத்தில் பெண்களுக்கு மனநிறைவு ஏற்படும் வகையில் பல சம்பவங்கள் நடைபெறும். கணவன் - மனைவி இடையே கனிவும், பரிவும் காணப்படும். பிள்ளைகளின் திருமணப் பேச்சுவார்த்தையை தொடங்குவீர்கள்.

பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சூட்டினால் மனக்குறை நீங்கும்.


Next Story