தனுசு - வார பலன்கள்


தனுசு - வார பலன்கள்
x
தினத்தந்தி 13 Jan 2023 1:27 AM IST (Updated: 13 Jan 2023 1:28 AM IST)
t-max-icont-min-icon

உற்சாகத்துடன் காரியங்களைச் செய்யும் தனுசு ராசி அன்பர்களே!

காரியங்களை கவனத்தோடு செய்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர், சக ஊழியர்களிடம் செய்யும் வாக்குவாதத்தால் மன உளைச்சலை சந்திப்பீர்கள். சொந்தத் தொழிலில், வேலைப் பளுவால் குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடித்துக் கொடுக்க முடியாமல் போகலாம். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் சிரமங்கள் ஏற்படும். அவசரத் தேவைக்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். வெளியூரில் நடக்கும் நிகழ்ச்சிக்கு பெண்கள் சென்று வருவார்கள். கலைஞர்கள் பழைய ஒப்பந்தங்களிலேயே ஈடுபாட்டுடன் பணியாற்றுவாா்கள். புதிய வாய்ப்புகளைப் பெற, சகக்கலைஞர்கள் மூலம் முயற்சிகளை மேற்கொள்வார்கள். பங்குச்சந்தை வியாபாரம் ஏற்றத் தாழ்வுகளோடு நடைபெறும். எனவே லாபம் குறையலாம்.

பரிகாரம்:- சனிக்கிழமை சனி பகவானுக்கு, நல்லெண்ணெய் தீபமிட்டு எள் அன்னம் படைத்து வழிபாடு செய்யுங்கள்.


Next Story