தனுசு - வார பலன்கள்


தனுசு - வார பலன்கள்
தினத்தந்தி 9 Feb 2023 7:25 PM GMT (Updated: 2023-02-10T00:56:47+05:30)

தனித்திறமையுடன் செயலாற்றும் தனுசு ராசி அன்பர்களே!

எடுத்த காரியங்களை நிதானமாக கையாளுங்கள். சிறப்பான முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் செய்யும் பணிகளில் சிறு தவறு ஏற்பட்டு தொல்லை அளிக்கலாம்.

சொந்தத் தொழிலில் விரைவாகச் செய்த பணியில் ஏற்பட்ட தவறுகளைச் சரிசெய்து கொடுப்பீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளுடனான கருத்து வேறுபாட்டால் பிரிந்து செல்லும் நிலை உருவாகும். அதிக முதலீட்டுடன் புதிய கூட்டாளியைச் சேர்த்துக்கொள்ள முயற்சிப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் வழக்கமான லாபம் குறையாது. அதிக லாபம் பெற நண்பர்களின் ஒத்துழைப்பு உதவியாக இருக்கும். கலைஞர்கள், சிறிய விபத்துகளைச் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பழைய கடனைத் தீர்க்கப் புதிய கடன் வாங்குவீர்கள். பெண்கள், மங்கள நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.

பரிகாரம்:- குரு பகவானுக்கு வியாழக்கிழமை வில்வ மாலை சூட்டி வழிபட்டால் தீவினைகள் அகலும்.


Next Story