தனுசு - வார பலன்கள்


தனுசு - வார பலன்கள்
x
தினத்தந்தி 23 Feb 2023 7:57 PM GMT (Updated: 2023-02-24T01:28:15+05:30)

சலிப்படையாத உழைப்பு நிறைந்த தனுசு ராசி அன்பர்களே!

தீவிர முயற்சியால் முன்னேற்றம் காண வேண்டிய வாரம் இது. எவ்வளவுதான் உழைத்தாலும் வெற்றி தள்ளிப்போகும். தளர்ச்சி கண்டு மனம் தளராமல், தக்க நண்பர்கள் உதவியால் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வரவு வருவதற்கு முன்பு, செலவு வாசலில் காத்திருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் பொறுப்பு களை கவனமாக செய்யுங்கள். ஒருசிலருக்கு அலுவலகக் கடன் கிடைத்து, பாதியில் நின்ற வேலையை தொடர்வார்கள். சொந்தத் தொழிலில், வேலையை விரைவாக முடித்துக் கொடுக்க ஓய்வின்றி பணியாற்றுவீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் லாபகரமாக இயங்கும். தொழிலை பெருக்குவது பற்றி, கூட்டாளிகளுடன் கலந்தாலோசிப்பீர்கள். குடும்ப பிரச்சினைகளை பெண்களே சமாளித்து விடுவார்கள். கலைஞர்கள், புதிய வாய்ப்புக்காக காத்திருக்க நேரிடும். பங்குச்சந்தையில் சிறிது லாபம் இருக்கும்.

பரிகாரம்:- சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு, வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டு வாருங்கள்.


Next Story