தனுசு - வார பலன்கள்


தனுசு - வார பலன்கள்
x
தினத்தந்தி 14 April 2023 1:53 AM IST (Updated: 14 April 2023 1:54 AM IST)
t-max-icont-min-icon

மலர்ந்த முகத்தோடு காட்சியளிக்கும் தனுசு ராசி அன்பர்களே!

முயற்சிகளோடு செயல்பட்டு, பல காரியங்களில் வெற்றிநடை போடுவீர்கள். முக்கிய நபர்கள், தக்க சமயங்களில் உங்களுக்கு உதவி செய்வார்கள். பணவரவுடன் புதிய நபர்களின் வருகை மகிழ்வளிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, அலுவலகத்தில் வரவேண்டிய கடன் தொகை வந்துசேரும்.

சொந்தத் தொழிலில் முன்னேற்றமான போக்கு காணப்படும். பணிகளை விரைவாக ஓய்வின்றிச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் ஏற்படலாம். நிலுவைகள் வசூலாகும். பாதியில் நின்ற வீட்டு வேலையை மீண்டும் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்வான சூழ்நிலை இருக்கும். மகன் அல்லது மகளுக்கு நல்ல வேலை கிடைத்து, குடும்பப் பொருளாதாரம் மேம்படும். பெண்களில் சிலருக்கு நீண்ட நாள் மனக்கவலை விலகும். கலைஞர்கள் புதிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களால், புகழும், பொருளும் பெறுவார்கள்.

பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு, வில்வ மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றுங்கள்.


Next Story