தனுசு - வார பலன்கள்
கருத்து மிக்க எழுத்தாற்றல் பெற்ற தனுசு ராசி அன்பர்களே!
காரியங்கள் ஒவ்வொன்றிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமான பலன்களை அடைவீர்கள். சில காரியங்கள் வெற்றி அடைய முக்கிய நபர்களின் உதவி தேவைப்படும். வீடு, மனை, வாகனங்களில், நீங்கள் விரும்பிய மாற்றங்களைச் செய்து மகிழ்வீர்கள். வர வேண்டிய பணவரவுகள், சிறிது தாமதத்திற்குப் பிறகு வந்துசேரும். உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகளின் கோபப் பார்வைக்கு இலக்காகாமல் இருக்க, தங்கள் கடமைகளில் கவனமாக இருங்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களால் பொருளாதார முன்னேற்றமும் அடைவர். கூட்டு வியாபாரத்தில் வழக்கமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். கலைஞர்கள் பழைய வாய்ப்புகளிலேயே தேவையான வருமானம் பெறுவர். பங்குச்சந்தை வருமானம் சுமாராக இருக்கும்.
பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை துர்க்கை அம்மனுக்கு மலர் மாலை சூட்டி நெய் தீபம் ஏற்றுங்கள்.