தனுசு - வார பலன்கள்
இனிமை தரும் பேச்சாற்றல் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
எடுத்த காரியங்களில் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீர்கள். வெள்ளிக்கிழமை அன்று சந்திராஷ்டமம் உள்ளதால் சில செயல்கள் எதிர்பார்க்கும் திருப்தியைத் தராமல் போகக்கூடும். உங்கள் முயற்சியால் சில தினங்களுக்கு முன்னர் கை நழுவிப் போன வாய்ப்பு ஒன்று மீண்டும் தேடி வந்து சேரலாம். வருமானத்தைப் பெருக்கும் வழி பற்றி ஆலோசிப்பீர்கள்.
உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் பண உதவிகள் கிடைக்கும். சகப் பணியாளர்களின் குடும்ப விஷயங்களில் தலையிடாமல் இருப்பது அவசியம். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, வாடிக்கையாளர்கள் மூலம் உதவிகள் ஏற்படலாம். அவசர வேலையில் பரபரப்பு அதிகமாகி அல்லல்படும் நிலை ஏற்படும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் வியாபாரத்தை விரிவாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை அம்மனுக்கு வெண்மையான மலர் மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.