தனுசு - வார பலன்கள்
தர்மம் செய்வதில் ஈடுபாடு காட்டும் தனுசு ராசி அன்பர்களே!
எதிர்பாராத விருந்தினர் வருகையால் சுபச் செலவு உண்டு. பழைய பகை மறையவும், நீதிமன்ற வழக்கு சாதகமாகவும் மாறும் சூழல் உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு, பொறுப்புள்ள பதவிகள் வந்துசேரும். உத்தியோக ரீதியான முயற்சிகள் சாதகமாக இருக்கும். சொந்தத் தொழில் சிறப்படையும் வண்ணம் வாடிக்கையாளர்கள் பெருகுவர். பண வசதியால் நவீனக் கருவிகளின் உபயோகமும், அதனால் பணிகளை விரைந்து செய்யும் திறமையும் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். வியாபார தலத்தை விரிவாக்க முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சீரானப் போக்கு காணப்படும். பெண்களுக்கு அண்டை அயலாருடன் சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற சகக்கலைஞர்களின் ஒத்துழைப்பை பெற முற்படுவார்கள்.
பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நவக்கிரகத்தில் உள்ள சூாியனுக்கு நெய் தீபமிட்டு வணங்கி வாருங்கள்.