விருச்சகம் - வார பலன்கள்


விருச்சகம் - வார பலன்கள்
தினத்தந்தி 6 July 2023 7:12 PM GMT (Updated: 6 July 2023 7:14 PM GMT)

07-07-2023 முதல் 13-7-2023 வரை

யோசனையுடன் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே!

காரியங்கள் பலவற்றில் தீவிர முயற்சியுடன் செயல்பட்டு முன்னேறுவீர்கள். நிறைவு பெறாத செயல்களைச் செய்து முடிக்க தக்க நபர்களை நாடுவீர்கள். திட்டமிட்டபடி பண வரவுகள் கைகளுக்கு வந்துசேரும். அரசு தொடர்பான காரியங்கள், எதிர்பார்த்தது போல குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு அலுவலகத்திலேயே பதவி உயர்வும், சம்பள உயர்வும் ஏற்படக்கூடும். உயரதிகாரிகளின் ஆதரவுவோடு முக்கிய சலுகைகளையும் பெறுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அதிகப் பொறுப்புகளால், போராட்டமான நிலை ஏற்படலாம். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் வங்கிகளில் எதிர்பார்த்த பண வரவுகள் கிடைக்கலாம். குடும்ப பிரச்சினைகளைக் கூடிப்பேசி சுமுகமாக சரி செய்து கொள்வீர்கள். கலைஞர்கள், பெரிய நிறுவனங்களில் வாய்ப்புகளைப் பெறுவர்.

பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றுங்கள்.


Next Story