விருச்சகம் - வார பலன்கள்


விருச்சகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 21 July 2023 1:30 AM IST (Updated: 21 July 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

அனுபவமும், நுண்ணறிவும் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே!

சிந்தனையும், செயலும் வலுப்படும் வாரம் இது. முன்னேற்றமான செயல்களைச் செய்வதில் ஏற்றமான பலன்களை அடைய முடியும். அரசாங்க வழிகளில் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடமைகளில் கவனமாகச் செயல்பட்டு, மேலதிகாரிகளின் பாராட்டினைப் பெறக்கூடும். ஒரு சிலருக்கு பதவி உயர்வுடன் வெளியூர் மாற்றம் வரலாம்.

சொந்தத் தொழிலில் உள்ளவர்கள் அயராத உழைப்பினால் முன்னேற்றம் காண்பர். பொருள் வரவு மகிழ்ச்சி தரும். கூட்டுத்தொழில் செய்பவர்கள், தொழில் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவர். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் தலைதூக்கும். வாடகை வீட்டில் இருந்தவர் புதிய வீடு வாங்கி குடிபோகும் சூழல் ஏற்படும். கலைஞர்கள், தொழிலில் புதிய திருப்பம் காண்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குச்சந்தையில் முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்.


Next Story