விருச்சகம் - வார பலன்கள்
தர்ம சிந்தனை மிகுந்த விருச்சிக ராசி அன்பர்களே!
நண்பர்கள் ஒத்துழைப்புடன் முன்னேற்றமான பலன்களைப் பெற முற்படுவீர்கள். செலவுகளைச் சந்தித்த பின்னரே வரவுகள் கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடி இருக்கும். தவறுகளைச் செய்துவிட்டு அதிகாரியின் கோபப்பார்வைக்கு இலக்காக நேரிடும். சகப் பணியாளர்களிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது.
சொந்தத் தொழில் செய்பவர்கள், பணிச்சுமை காரணமாக, குறிப்பிட்ட காலத்தில் வேலைகளை செய்து கொடுக்க இயலாமல் போகலாம். வேலைப்பளுவால் ஓய்வு நேரம் குறையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், போட்டிகளைத் தவிர்க்க புதிய யுக்தியைக் கையாள்வீர்கள். குடும்பத்தில், எதிர்பாராத விருந்தினர் வருகை, செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். கலைஞர்கள் கால நேரம் பாராமல் பணியாற்றுவார்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.