விருச்சகம் - வார பலன்கள்


விருச்சகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 12 Oct 2023 7:52 PM GMT (Updated: 12 Oct 2023 7:53 PM GMT)

13-10-2023 முதல் 19-10-2023 வரை

சிறந்த சிந்தனையாளரான விருச்சிக ராசி அன்பர்களே!

நண்பர்கள் உதவியுடன் சில செயல்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்க்கும் தன வரவுகள் திட்டமிட்டபடி வந்து சேர்ந்தாலும், செலவுகள் அதிகரிக்கும். தர்ம காரியங்களிலும், புண்ணிய செயல்களிலும் நாட்டம் அதிகமாகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் விருப்பப்படி பணியை செய்து கொடுக்க நேரிடும். சொந்தத் தொழில் செய்பவர்களின் மனதில் உற்சாகம் பிறக்கும். புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் பணவரவு அதிகமாகும். கூட்டுத்தொழில் வியாபாரம் சுமாராக நடைபெற்றாலும் லாபம் குறையாது. கூட்டாளிகளுடன் கூடிப்பேசி போட்டிகளை முறியடிக்க ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகள் சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். பெரியோர்களின் சமரசத்தால் உறவு விரிசல் சரியாகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்றாலும், எதிர்பார்க்கும் ஆதாயம் இருக்காது.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சூட்டுங்கள்.


Next Story