விருச்சகம் - வார பலன்கள்
இந்த வாரம் சனிக்கிழமை பகல் 11.36 முதல் திங்கட்கிழமை இரவு 11.08 வரை சந்திராஷ்டமம் உள்ளது. வார்த்தைகளில் கடுமையைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளில் தாமதம் இருக்கும். அலைச்சல் உண்டு. உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். பிறரை விமர்சனம் செய்வதன் மூலம் பிரச்சினை வரலாம். சொந்தத் தொழிலில் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். கூட்டுத்தொழிலில் தடை தாமதங்கள் வரக் கூடும். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். கடன் தொல்லைகள் தரலாம். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் பணிகளில் பரபரப்பாக ஈடுபடுவர். பங்குச்சந்தை வியாபாரம் எதிர்பார்க்கும் திருப்பம் தரும். இந்த வாரம் வியாழக்கிழமை நவக்கிரக சன்னிதியில் உள்ள கேது பகவானுக்கு நெய் தீமிட்டு வழிபாடு செய்வது நல்ல பலன் தரும்.
Next Story