விருச்சகம் - வார பலன்கள்


விருச்சகம் - வார பலன்கள்
தினத்தந்தி 2 Dec 2022 1:19 AM IST (Updated: 2 Dec 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

எதையும் எளிதில் சாதிக்கும் திறமை கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

நீங்கள் எடுத்துக் கொண்ட செயல்கள் சிலவற்றில் தடை தாமதம் இருந்தாலும், முடிவில் வெற்றி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பற்றியோ, சம்பள உயர்வு குறித்தோ, கோரிக்கை வைக்க சிறிது காலம் பொறுமையாக காத்திருப்பது நல்லது. சுயதொழில் நன்றாக நடைபெற கடும் உழைப்பை வெளிப்படுத்த வேண்டியது இருக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் சுமுகமாக நடந்து கொள்வது பிரச்சினைகளைத் தவிர்க்கும். குடும்பம் நன்றாக நடந்து வந்தாலும், சிறுசிறு பிரச்சினைகளும் இருக்கக்கூடும். பெண்களுக்கு தாய்வழி சொத்துக்கள் வந்து சேரலாம். கலைஞர்கள் பணியாற்றும்போது கவனமாக இருங்கள். இரவில் நீண்டதூரம் வாகனத்தில் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நன்மை தரும். பங்குச்சந்தையில் அதிக லாபம் பெற தினசரி நிலவரங்களைப் பார்ப்பது நல்லது.

பரிகாரம்:- புதன்கிழமை அன்று பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபட்டு வாருங்கள்.


Next Story